தூத்துக்குடி மாவட்டம், முக்காணி அம்பேத்கர் நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் பிரகாஷ் (30). கூலித் தொழிலாளி. இவருக்கு அழகுரதி என்ற மனைவியும், ஒரு வயதில் கவின்சன் என்ற மகனும் உள்ளனர். நேற்றிரவு பிரகாஷ் முக்காணியில் இருந்து பழையகாயல் நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
முக்காணி ஆட்டோ கேஸ் பல்க் அருகே செல்லும்போது தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீ்ட்டு ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்துக்குறித்து ஆத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து பேருந்தை ஓட்டி வந்த காயல்பட்டினம் கீழ லட்சுமிபுரத்தை சேர்ந்த ஆத்திமுத்து மகன் சித்திரைப்பாண்டி (27) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment