தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகிலுள்ள மூக்குபீறியில் வசித்து வருவந்தவர் ராஜ் (35) கூலி தொழிலாளி. இவர் மனைவி திவ்யா (32) இவர்களுக்கு ரகு என்ற ஆண் மகனும் ரஞ்சனி என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இவர் கடந்த மூன்று வருடங்களாக மனைவியை பிரிந்து தாயுடன் மூக்குப்பீறியில் வசித்து வருகிறார்.
இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் சம்பவத்தன்று மாலையில் வெளியே சென்றவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள் நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி சுடுகாட்டு பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
அந்த பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இவரது கழுத்தில் கயிரால் இறுக்கப்பட்ட காயமும் உடலில் ரத்த காயமும் காணப்பட்டது. இதனால் இவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்ற நாசரேத் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
No comments:
Post a Comment