தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து மணி மண்டபத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை நவ 14 அன்று திறந்து வைக்கிறார்.
தூத்துக்குடி நகராட்சி நகர்மன்ற தலைவராக குரூஸ்பர்னாந்து பணியாற்றிய காலத்தில் வல்லநாட்டிலிருந்து தூத்துக்குடிக்கு குடிதண்ணீர் முதன் முதலில் கொண்டு வந்த அவரது பெயரில் பழைய மாநகராட்சி கட்டிடம் இயங்கி வருகிறது. இந்நிலையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று சமுதாய சங்கங்கள் சார்பில் அரசுக்கும் அமைச்சருக்கும் கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி திருநெல்வேலி நெடுஞ்சாலை பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர் பூங்கா அருகில் அவரது சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்ட இடம் ஓதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக மணிமண்டபத்தை நாளை (நவம்பர் 14) திறந்து வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
No comments:
Post a Comment