தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புரையூர் ஆணைபிள்ளை சத்திரம் பகுதியைச் சேர்ந்த பொன்முடி மகன் சிரஞ்சீவி (28) என்பவர் நேற்று (12.11.2023) புரையூர் நெட்டையன் காலனி பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு மதுபோதையில் வந்த புரையூர் நெட்டையன் காலனியை சேர்ந்த கணேசன் மகன் முத்து சூர்யா (22) மற்றும் சுப்பிரமணியன் மகன் சுரேந்தர் (19) ஆகிய இருவரும் சிரஞ்சீவியிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சிரஞ்சீவி அளித்த புகாரின் பேரில் குரும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து எதிரிகளான முத்து சூர்யா மற்றும் சுரேந்தர் ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment