தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் கீழநாலுமூலைக் கிணறு கிராமத்தைச் சேர்ந்த த.சதீஷ் என்பவர் பரமன்குறிச்சி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நடுநாலு மூலைக்கிணறு அருகே மாடு ஒன்று குறுக்கே வந்ததால், அவர் நிலை தடுமாறி, சாலையில் விழுந்து படுகாயமடைந்து, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் சார்பில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் (22.11.2023) நேரில் சென்று அன்னாரது உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். திருச்செந்தூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ், வட்டாட்சியர் வாமணன், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment