எட்டயபுரம் விபத்தில் மூளை சாவு அடைந்த விவசாயின் உடலை உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 23 November 2023

எட்டயபுரம் விபத்தில் மூளை சாவு அடைந்த விவசாயின் உடலை உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர்

எட்டயபுரம் அருகே - விபத்தில் மூளை சாவு அடைந்த விவசாயின் உடலை உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர், அரசு மரியாதையுடன் நடைபெற்ற இறுதி சடங்கு.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மாவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணசாமி (42) என்பவர் (20.11.2023) அன்று இரவு பந்தல்குடி அருகில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து, மதுரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி மூளை சாவு அடைந்தார். 


இதையடுத்து அவரது குடும்பத்தினரால் அன்னாரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது‌. இதையடுத்து இன்று அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்றது. 


உடல் உறுப்பு தானம் செய்த விவசாயி கிருஷ்ணசாமி உடலுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா, விளாத்திகுளம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad