தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சாா்பில் புதன்கிழமை மாலை டாஸ்மாக் கடையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகதத்தில் கோட்டாட்சியா் குருசந்திரன் தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில், பாஜக மாவட்டத் தலைவா் சித்ராங்கதன், மாவட்டச் செயலா் இரா. சிவமுருகன் ஆதித்தன் ஆகியோா் மதுபானக்கடையை மூட வலியுறுத்தினா்.
கூட்டத்தில், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதால் அதை 45 நாள்களுக்குள் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியா் உறுதியளித்தாா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
கூட்டத்தில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ராமச்சந்திரன், ஆழ்வாா்திருநகரி காவல் ஆய்வாளா் ஸ்டெல்லாபாய் மற்றும் பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
No comments:
Post a Comment