தூத்துக்குடி மாவட்டம், CSI-தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் சுற்றுச்சூழல் கரிசனை துறை மற்றும் சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக 22.11.2023 அன்று சாயர்புரத்தில் மர கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் அவர்கள் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு மரம் நடுவதைப் பற்றி விழிப்புணர்வு கொடுத்து, சுற்றுச்சூழல் அடைந்து வரும் சீர்கெட்டினைக் குறித்து சுற்று சூழல் கரிசனை துறை இயக்குனரும் போதகருமான ஜான் சாமுவேல் விளக்கி கூறினார்.
கல்லூரி மாணவ மாணவிகள் மிக ஆர்வமாகக் கவனித்தனர். மேலும் கல்லூரி மாணவ, மாணவிகள் உற்சாகமாக மர கன்றுகளை நட்டனர். இந்த நிகழ்ச்சியை கல்லூரி நாட்டு நல பணித்திட்ட அலுவலர் உதவி பேராசிரியர் டென்னிசன் செய்திருந்தார்.
No comments:
Post a Comment