சாத்தான்குளம் - வட்டார வாக்காளர் விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 22 November 2023

சாத்தான்குளம் - வட்டார வாக்காளர் விழிப்புணர்வு பேரணி.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், வட்டாச்சியர் திருமதி. ரதிகலா தலைமையில், TNDTA RMP புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் D. ஜெபசிங் மனுவேல் முன்னிலையில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பது பற்றி எடுத்துரைத்து பேரணியை கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்கள்.



விழிப்புணர்வு பேரணியில், சாத்தான்குளம் TNDTA RMP புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்களும், ஆசியர்களும் ஹென்றி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வாக்காளர்கள் சேர்ப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


பேரணி TNDTA RMP புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி காமராஜர் சிலை அருகில் நிறைவு பெற்றது. ஆசிரியர்கள் லயன் M.டேனியல், B.வசந்த் ஜெபதுரை, J. ஜோசப், A. மார்க்ராஜ், R. கெளசிக் ஆகியோர் பேரணிக்கான எற்பாடுகளை செய்து பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad