திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 18ஆம் தேதி சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகம் மற்றுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்து சுமார் 6 லட்சம் பக்தர்களுக்கு மேல் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நெல்லை முப்புடாதி அம்மன் கோவில் தெரு சேர்ந்த பாக்யராஜ் (40) என்பவர் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். நாழிக்கிணறு அருகே குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர் பாக்யராஜ் மனைவி கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலிச் செயினை பறித்து சென்று விட்டாராம்.
இதுபோல் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த கோபி (50), என்பவரது மகள் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க நெக்லஸை மர்ம நபர் திருடி சென்று விட்டாராம். இது குறித்து சம்பந்தப்பட்ட 2பேரும் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment