கோவில்பட்டி - இளையரசனேந்தல் ரயில்வே சுரங்கப் பாலத்தில் மழை நீர் - மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 9 November 2023

கோவில்பட்டி - இளையரசனேந்தல் ரயில்வே சுரங்கப் பாலத்தில் மழை நீர் - மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்த நிலையில் இன்று காலையும் சில இடங்களில் மழை பெய்தது. கனமழை காரணமாக ஓட்டப்பிடாரம் அருகே உள்ள செக்காரகுடியில் உள்ள பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் பாலத்தை கடக்க முடியாமல் தவித்தனர். இதைத்தொடர்ந்து செக்காரகுடியில் உள்ள 4 அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்படி ஒரு மேல்நிலைப்பள்ளி, 3 தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.


கோவில்பட்டி அருகே அத்தைகொண்டான் பகுதியில் உள்ள பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றது. கோவில்பட்டி- இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் சுமார் 3 அடி உயரத்துக்கும் மேலாக மழை வெள்ளம் தேங்கி நின்றது. கோவில்பட்டிக்கு 28 பயணிகளுடன் சென்ற தனியார் பஸ் சுரங்கப்பாதையின் நடுவில் மழைநீர் வெள்ளத்தில் சிக்கியது. 


சம்பவ இடத்திற்கு கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று கயிறு கட்டி, பஸ்சில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.கனமழையின் காரணமாக மழை நீர் தேங்கியதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் தேங்கியிருந்து மழைநீர் மோட்டார்கள் மூலமாக அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி மேற்படி ரயில்வே சுரங்க பாதையை
ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், இனிவரும் காலங்களில் கனமழை பெய்யும் பொழுது மேற்குறிப்பிட்ட இரயில்வே சுரங்கப் பாலத்தில் மழை நீர் தேங்காத வண்ணம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, 09.11.2023 தேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 


ஆய்வின் போது கோவில்பட்டி நகர் மன்றத் தலைவர் கா.கருணாநிதி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாப், கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் கமலா, வட்டாட்சிபர் லெனின் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad