சாத்தான்குளம் - ஊராட்சி ஒன்றியத்தில் - மக்கள் களம் நிகழ்ச்சி சுமார் 118 பயனாளிகளுக்கு ரூ.10,97,503/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்பி வழங்கினார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 9 November 2023

சாத்தான்குளம் - ஊராட்சி ஒன்றியத்தில் - மக்கள் களம் நிகழ்ச்சி சுமார் 118 பயனாளிகளுக்கு ரூ.10,97,503/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்பி வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஊராட்சி கோமாநேரி உள்ளிட்ட பல ஊராட்சிகளில் நடைபெற்ற மக்கள் களம், மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கோ. லட்சுமிபதி, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் மொத்தம் 118 பயனாளிகளுக்கு ரூ.10,97,503/- மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்பி வழங்கினார்.


முன்னதாக நடுவக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட தட்டார்மடத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் விவசாய விளைபொருட்களை வைப்பதற்கான சேமிப்பு கிட்டங்கி கட்டுவதற்கும், ரூ.8.03 இலட்சம் மதிப்பீட்டில் மீன் வார சந்தை கட்டிடம் கட்டுவதற்கும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி , மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை துவக்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சிகளில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி செ.அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) வீரபுத்திரன், மாவட்ட ஆவின் தலைவர் சுரேஷ்குமார், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேவவின்னரசி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் கு.சுலைகாபீவி (புத்தன்தருவை), தினேஷ் ராஜசிங் (அரசூர்), சபிதாசெல்வராஜ் (நடுவக்குறிச்சி), திருக்கல்யாணி(சாஸ்தாவி நல்லூர்), சாத்தான்குளம் வட்டாட்சியர் ரதிகலா, சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுரேஷ், கருப்பசாமி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad