தூத்துக்குடி - கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 30 November 2023

தூத்துக்குடி - கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது.

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் கடந்த 28.11.2023 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பட்டி சொசைட்டி சந்திப்பு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் தூத்துக்குடி வடக்கு ராஜா தெருவைச் சேர்ந்த கென்னடி மகன் சிம்சன் (28) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.


உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரி சிம்சனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி சிம்சன் மீது ஏற்கனவே வடபாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கஞ்சா வழக்கு உட்பட 9 வழக்குகளும், ஏரல் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என மொத்தம் 12 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad