தூத்துக்குடி மாவட்டம், நவ.30, ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிமறித்து தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் போலீசார் நேற்று (29.11.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு ஆத்தூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் பழையகாயல் ராமச்சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த சேர்மபாண்டி மகன் முத்துப்பாண்டி (24) என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரி முத்துபாண்டியை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி முத்துபாண்டி மீது ஏற்கனவே ஆத்தூர் காவல் நிலையத்தில் வழிப்பறி, கஞ்சா விற்பனை உட்பட 7 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment