கயத்தாறு - கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 30 November 2023

கயத்தாறு - கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது.

தூத்துக்குடி மாவட்டம், நவ.30. கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது.


கயத்தாறு சிவஞானபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகையா மகன் ஆனந்தராஜ் (33) என்பவரது உறவினர் ஒருவருக்கும், கயத்தாறு கிருஷ்ணா காலனியைச் சேர்ந்த கோட்டைசாமி மகன் பாலமுருகன் (19) என்பவருக்கும் தீபாவளி பண்டிகையின் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மேற்படி ஆனந்தராஜ் தலையிட்டு அவர்கள் இருவரையும் கலைந்து செல்ல வைத்துள்ளார்.


இந்நிலையில் நேற்று (29.11.2023) பாலமுருகன் சிவகங்கை மாவட்டம் வி.புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சரவணன் (58) என்பருடன் சேர்ந்து கயத்தாறு ஞானபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஆனந்தராஜிடம் அவரது உறவினர் எங்கே என கேட்டு தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


இதுகுறித்து ஆனந்தராஜ் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் உதவி ஆய்வாளர் அந்தோணி திலீப் வழக்கு பதிவு செய்து எதிரிகளான பாலமுருகன் மற்றும் சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்தார்.


மேற்படி கைது செய்யப்பட்ட எதிரிகளில் சரவணன் மீது ஏற்கனவே கோயம்புத்தூர் மாவட்டத்தில் கருமத்தம்பட்டி மற்றும் போத்தனூர் காவல் நிலையத்தில் தலா ஒரு திருட்டு வழக்கும், மதுரை மாவட்டத்தில் கருப்பையூரணி காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், மதுரை நகரம் கூடல்புதூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட 2 வழக்குகளும், சிவகங்கை மாவட்டத்தில் பழையனூர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், சிப்காட் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட 2 வழக்குகளும், டவுன் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உட்பட 3 வழக்குகளும், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலையத்தில் 2 கொலை முயற்சி வழக்குகளும் என மொத்தம் 14 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad