திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் இடையன்விளையில் பயணியர் நிழற்குடையும், மேலும் ரூ. 20 இலட்சம் மதிப்பீட்டில் இடையன்விளையில் அறுப தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி துவக்க விழாவும் நடந்தது. விழாவிற்கு கச்சனாவிளை ஊராட்சி மன்றத் தலைவர் கிங்ஸ்டன் தலைமை வகித்தார்.
திருச்செந்தூர் கோட்டாட்சியர் குருச் சந்திரன், ஏரல் வட்டாட்சியர் கைலாஷ் குமாரசாமி, ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ஜனகர், வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியலீலா, மேல ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ்குமார் வார்டு உறுப்பினர்கள் பாக்கியராணி, அமுதா, ஷர்மிலி, செல்வம் விஜி, குருஸ்கின்ஸ்டன்,தெய்வகனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் திமுக மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற செயலாளர் பர்னபாஸ் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment