மாவடிபண்ணை - பள்ளியில் மர கன்று நடும் விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 28 November 2023

மாவடிபண்ணை - பள்ளியில் மர கன்று நடும் விழா.

தூத்துக்குடி மாவட்டம், மாவடி பண்ணையில் அமைந்துள்ள தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது 


மர கன்றுகளை தென்திருப்பேரை ஹேஜோ ஹெல்த் அண்ட் நேச்சுரல் க்யூர் மற்றும் நாசரேத் டவர் லயன்ஸ் சங்கமும் இணைந்து
செய்து இருந்தனர்.


சுற்றுச்சூழலை பராமரிக்கும் விதமாகவும் பள்ளி மாணவர்களிடையே தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதனை முன்னெடுக்கும் விதமாக இன்று நவ.28 மாவடிபண்ணை பள்ளியில் மரக்கன்றுகளை நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அதன் படி தேவதாரு வட்டார தலைவர் லயன் ஆரோக்கியபழம் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜாய்ஸ் முன்னிலையில் பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் இணைந்து பள்ளி வளாகத்தில் மர கன்றுகளை நடவு செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad