தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், நவ 28.
குலசை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோவில் கடத்தி வந்த 3 எதிரிகள் கைது - ரூபாய் 19,500/- மதிப்புள்ள 24 கிலோ புகையிலை பொருட்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ பறிமுதல்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ரெகுராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர் அய்யப்பன் மற்றும் போலீசார் நேற்று (27.11.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலசேகரன்பட்டினம் பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்ததில்,
அதில் திருச்செந்தூர் அமலி நகரைச் சேர்ந்த சக்திவேல் மகன் கணபதி (44), திருச்செந்தூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுடலை மகன் முனியாண்டி (36) மற்றும் நாசரேத் மூக்குப்பீரி பகுதியை சேர்ந்த காளியப்பன் மகன் மிக்கேல் ராஜ் (52) மற்றும் சிலர் சேர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோவில் கடத்தி வந்தது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரிகளான கணபதி, முனியாண்டி மற்றும் மிக்கேல் ராஜ் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த ரூபாய் 19,500/- மதிப்புள்ள 24 கிலோ புகையிலை பொருட்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீஸ் சார்பாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment