எப்போதும்வென்றான் - இருசக்கர வாகனம் திருட்டு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 29 November 2023

எப்போதும்வென்றான் - இருசக்கர வாகனம் திருட்டு.

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய எதிரி கைது - ரூபாய் 1,50,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் மீட்பு.


எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எப்போதும்வென்றான் மேற்கு தெருவை சேர்ந்த கண்ணன் மகன் செந்தில்குமார் (34) என்பவர் கடந்த 15.11.2023 அன்று தனது இருசக்கர வாகனத்தை அவரது வீட்டில் நிறுத்திவிட்டு மறுநாள் பார்க்கும்போது அந்த இருசக்கர வாகனம் திருடு போயுள்ளது.


இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் இளையராஜா (19) என்பவர் மேற்படி செந்தில்குமாரின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.


இதனையடுத்து எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில் வேல்முருகன் மற்றும் போலீசார் எதிரி இளையராஜாவை கைது செய்து, அவரிடமிருந்த ரூபாய் 1,50,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad