நாசரேத் - சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 14 November 2023

நாசரேத் - சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத், நவம்பர் 14. சாலமோன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 134வது பிறந்த நாள் விழா குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன் படி  அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். 


சாலமோன் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளித் தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன், ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தார். பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் குழந்தைகள் ஜவஹர்லால் நேருவை போல் வேடம் அணிந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். 


பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது. மாணவர்கள் ஜவஹர்லால்  நேருவின் வாழ்வில் நடந்த ஒரு சில நிகழ்ச்சிகளை நடித்து காட்டினர். பள்ளி உதவி முதல்வர் பியூலா ஜாய்ஸ் நன்றி கூறினார். இந்த விழா ஏற்பாட்டினை உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad