தூத்துக்குடி - எம்பவர் மக்கள் மருந்தக வளாகத்தில் எம்பவர் சர்க்கரை நோய் கல்வி மற்றும் தடுப்புத் திட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சர்க்கரை நோய் சங்கம் சார்பில் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 14 November 2023

தூத்துக்குடி - எம்பவர் மக்கள் மருந்தக வளாகத்தில் எம்பவர் சர்க்கரை நோய் கல்வி மற்றும் தடுப்புத் திட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சர்க்கரை நோய் சங்கம் சார்பில் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை.

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடியில் உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி பீச் ரோட்டிலுள்ள எம்பவர் மக்கள் மருந்தக வளாகத்தில் எம்பவர் சர்க்கரை நோய் கல்வி மற்றும் தடுப்புத் திட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சர்க்கரை நோய் சங்கம் ஆகியவற்றின் சார்பில் இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் மற்றும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு குறித்த கண்காட்சி நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சிக்கு எம்பவர் இந்தியா கௌரவ செயலாளர் ஆ.சங்கர் தலைமை தாங்கி முதல் பரிசோதனையை மேற்கொண்டார். டாக்டர். அருள் பிரகாஷ் கண்காட்சியை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். எம்பவர் மேலாளர் லலிதாம்பிகை நன்றியுரை கூறினார்.


பொதுமக்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, எடை மற்றும் உயரம் (பி.எம்.ஐ.), இரத்த அழுத்தம் (BP) ஆகிய பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது. மேலும் சர்க்கரை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சையைப் பற்றிய கல்வி, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை முறை, உடற்பயிற்சி, சத்தான உணவுகள் உட்கொள்ளுதல் பற்றிய ஆலோசனை ஆகியவையும் இந்த முகாமில் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம்பவர் பணியாளர் ஜான் வில்மார்ட் தீபக் சிறப்பாக செய்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad