கோவில்பட்டி நகராட்சியுடன் 7 ஊராட்சிகளை இணைக்க முடிவு - நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 1 November 2023

கோவில்பட்டி நகராட்சியுடன் 7 ஊராட்சிகளை இணைக்க முடிவு - நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி கூட்ட அரங்கில் நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் நகராட்சி ஆணையாளர் கமலா முன்னிலையில் சாதாரண கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்  இனாம் மணியாச்சி, மூப்பன்பட்டி , இலுப்பையூரணி, திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், மந்திதோப்பு, நாலாட்டின் புதூர் உள்ளிட்ட 7 ஊராட்சிகளை கோவில்பட்டி நகராட்சி உடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனால் நகராட்சிக்கு கிடைக்க பெரும் சாலை, கழிவு நீர் மேலாண்மை, தெரு விளக்கு, பூங்கா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தற்போது இணைக்க பட்டுள்ள 7 ஊராட்சிகளுக்கும் கிடைக்கும், மேலும் அப்பகுதியின் மதிப்பும் உயரும் என எதிர்பார்க்க படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad