திருச்செந்தூர் முருகன் கோயிலில் கழிவுநீர் கால்வாய் மூடி உடைந்து சிக்கிய பெண் பக்தர்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 30 October 2023

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கழிவுநீர் கால்வாய் மூடி உடைந்து சிக்கிய பெண் பக்தர்!

மாதிரி படம்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் கழிவுநீர் கால்வாய் அருகில் கழற்றி போட்ட செருப்பை எடுக்க சென்ற போது எதிர்பாராத விதமாய் கால்வாய் சிமெண்ட் மூடி இடிந்து விழுந்தது.

அதில் விழுந்த பெண் பக்தர் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். உலக புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 


உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது ரூ300கோடி மதிப்பீட்டில் திருச்செந்தூர் கோயில் சீரமைக்கும் பணி மிக தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோவில் வடக்கு வாசல் வழியாக வெளியே வருவது வழக்கம்.


அப்படி வரும்போது கோயம்புத்தூர் டி.வி.எஸ்.நகரைசேர்ந்த நவபாலன் மனைவி வேலன்டினா(58). இவருக்கு 1ஆண் மற்றும் 1பெண்பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடிக்கு தனது தங்கை வீட்டிற்கு வந்த வேலன்டினா இன்று காலை திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது அவர் தனது செருப்பை வடக்கு வாசல் அருகில் கழிவுநீர் கால்வாய் அருகில் கழற்றி விட்டு சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்குள் சென்றுள்ளார். 


அந்த கழிவுநீர் ஓடையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் நீர், கோயிலில் உள்ள கழிவுநீர்கள் வரும் சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்து செருப்பை வேலன்டினா எடுக்க முயன்ற போது கழிவுநீர் கால்வாய் சிமெண்ட் மூடி எதிர்பாராத விதமாக இடிந்து கால்வாய்க்குள் விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்த பக்தர்கள் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்த வேலன்டினாவிற்கு இடது கால், வலது கை தோள்பட்டையில் பலத்த காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக-சுந்தரராமன் 

No comments:

Post a Comment

Post Top Ad