திருச்செந்தூாரில் தேவர் மகாஜன சங்கம் சார்பில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 30 October 2023

திருச்செந்தூாரில் தேவர் மகாஜன சங்கம் சார்பில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது!


திருச்செந்தூர், தூத்துக்குடி, திருவைகுண்டம் தாலுகா, காருகுறிச்சி தேவர் மகாஜன சங்கம் சார்பில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் 116 -வது தேவர் ஜெயந்தி விழா திருச்செந்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள பசும்பொன் தேவர் திருமண மண்டபத்தில் முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

விழாவில் திருச்செந்தூர் பகுதி ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. விழாவில் துணைச் செயலாளர் M.ராஜாராம் பாண்டியன் மற்றும் செயற்குழு உறுப்பினர் P.சண்முகசுந்தரத் தேவர், M.தங்கராஜ் மாதவன்தேவர்,V.கோட்டைசாமி தேவர்,  மற்றும் தி.மு.க. நகர செயலாளர். R.வாள் சுடலை மற்றும் வணிக வளாகம் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.


விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மேலாளர் திரு. A.கந்தன் அவர்கள் இனிப்பு வழங்கி நன்றி கூறினார்.


- தமிழக குரல் செய்திகளுக்காக- சுந்தரராமன் 

No comments:

Post a Comment

Post Top Ad