நாசரேத், மறுரூப ஆலய வளாகத்தில் பனை விதைகள் விதைப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 7 October 2023

நாசரேத், மறுரூப ஆலய வளாகத்தில் பனை விதைகள் விதைப்பு.

நாசரேத், 05.10.2023 அன்று திருமறையூர் மறுரூப ஆலய வளாகத்தில் மூக்குபேரி, தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தலைமை ஆசிரியர் எட்வர்ட் மற்றும் Mother Social Service Trust நிறுவன இயக்குநர், Green Champion Dr. SJ. கென்னடி அவர்களுடன் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல சுற்று சூழல் கரிசனை துறை இயக்குனரும், திருமறையூர் சேகர தலைவருமான  அருள்திரு ஜான் சாமுவேல் ஆகியோர் இணைந்து பனை விதைகள் விதைத்தனர். 



திருமறையூர் மறுரூப ஆலய வளாகத்தில் பனைக்கு இடம் கொடுத்திருப்பது(விதைப்பது) இதுவே முதல் முறை என்று சேகர தலைவர் கூறினார், இதற்காக திருமறையூர் திருச்சபையாருக்கு அவர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர். 


தமிழ் நாடு இறையியல் கல்லூரி அமைந்திருந்த திருமறையூர் வளாகத்திலும் பனை விதைகள் விதைக்கப்பட்டது. அழிந்து வரும் பனை மரங்கள் பாதுகாத்திட மாணவர்களின் இம்முயற்சி பாராட்டுக்குரியது என அப்பகுதியினர் கூறினர். 

No comments:

Post a Comment

Post Top Ad