நாசரேத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி அக்டோபர் 14 இல் நடைபெறும். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 7 October 2023

நாசரேத்தில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி அக்டோபர் 14 இல் நடைபெறும்.

தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப்பள்ளி மற்றும் நாசரேத் ஒய் எம் சி ஏ இணைந்து நடத்தும் தியாகி டிகே செல்லதுரை நினைவு மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி ஒய் எம் சி ஏ நாசரேத் டிராபி வருகின்ற 14 10 2023 அன்று நாசரேத் மர்காசியஸ் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெறுகிறது.


ஐந்து கட்டங்களாக நடைபெறுகின்ற இந்த போட்டியில் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. நுழைவு கட்டணமாக தனியார் பள்ளி மாணவர்கள் 200 ரூபாயும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 100 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


இப் போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே பங்கு பெற முடியும் பங்கு பெற போட்டியாளர்கள் சதுரங்க அட்டை பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் சான்றிதழ் நகல் ஆகியவற்றை நேரில் கொண்டு வர வேண்டும். நுழைவு கட்டணத்தை www.easypaychess.com என்ற ஆன்லைன் முகவரி மூலமாக செலுத்த வேண்டும். 


பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் 13 10 2023 ஆகும். போட்டிகள் 14 10 2023 அன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் மாலை 5 மணிக்கு பரிசளிப்புடன் நிறைவு பெறும் என போட்டி அமைப்பு குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad