தலைமறைவாக உள்ள எதிரிகளுக்கு நீதிமன்றத்தால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதை நிறைவேற்றி வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்ட எஸ். பி தலைமையில் ஆலோசனை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 7 October 2023

தலைமறைவாக உள்ள எதிரிகளுக்கு நீதிமன்றத்தால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதை நிறைவேற்றி வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்ட எஸ். பி தலைமையில் ஆலோசனை.

தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள எதிரிகளுக்கு நீதிமன்றத்தால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதை நிறைவேற்றி வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து மாவட்ட காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் ஆலோசனைகூட்டம்.



குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளவர்களுக்கு நீதிமன்றத்தால் பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதை சம்மந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் உடனடியாக நிறைவேற்றி நீதிமன்ற விசாரணையை விரைந்து முடித்து எதிரிகளுக்கு தண்டனை பெறுவதில் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும், ஒவ்வொரு காவல் நிலையங்களில் நிறைவேற்றம் செய்யாமல் உள்ள பிடியாணைகள் குறித்தும், அவற்றை நிறைவேற்றம் செய்ய முடியாததற்கான காரணங்கள் குறித்தும் கேட்டறிந்து, பிடியாணை எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் 2 அல்லது 3 காவலர்கள் அடங்கிய தனிக்குழுவினர் அமைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் பிடியாணைகள் நிறைவேற்றுவது சம்மந்தமாக எவ்வித இடர்பாடுகளோ, கூடுதலாக காவலர்கள் தேவைப்பட்டாலோ அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள், கூடுதல் கண்காணிப்பாளர்கள் அல்லது தன்னையோ நேரடியாக அணுகி தேவையான உதவிகளை பெற்று உடனடியாக பிடியாணைகள் நிறைவேற்ற வேண்டும் என உறுதிபட தெரிவித்து அறிவுரைகள் வழங்கினார்.
 

இந்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிக்கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் 05.10.2023 அன்று மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது.


மேலும் இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிடியாணைகள் நிறைவேற்றுவது குறித்து காவல்துறையினரிடம் ஆலோசனை செய்தபோது, கேட்ட கேள்விகளுக்கு பயனுள்ளதாகவும், சிறப்பான முறையிலும் பதிலளித்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவலர் மகேஷ்குமார் என்பவருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

No comments:

Post a Comment

Post Top Ad