கொம்மடிக்கோட்டை, ஸ்ரீ சங்கரா பகவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இடையிலான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றன. கல்லூரி நிறுவனர் ஆனந்தா த. அமிர்தம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியின் 13 பள்ளிகளைச் சார்ந்த 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். குழுப்பாடல், குழு நடனம், மைம்,பேச்சுப்போட்டி, ரங்கோலி, ஓவியம், கழிவுகளில் கலை, காய்கறி செதுக்குதல் போன்ற பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கு நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியின் ஆரம்ப விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இக்கல்லூரியின் முன்னாள் மாணவரும் உலக அளவில் விருது பெற்ற பனையேறி என்ற குறும்படம் இயக்குனருமான கணேஷ் சிறப்புரை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
மேலும் கல்லூரி இணைச் செயலர் G.காசியானந்தம் கல்லூரியின் முதல்வர் முனைவர். S. அருள்ராஜ் பொன்னுத்துரை கல்லூரி துணை முதல்வர் முனைவர் S. மகேஷ் குமார் ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டுசிறப்புரை ஆற்றினர். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியற்கு கல்லூரி நிர்வாக குழு தலைவர் B. அத்வைதானந்தம் பரிசுகள் வழங்கினார். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
போட்டியில் கலந்து கொண்டு அதிக புள்ளிகளை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை குலசேகரபட்டினம், வள்ளியம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பெற்றனர் . கணினி அறிவியல் துறை பேராசிரியர் D. முத்து பிரியா நன்றி உரை வழங்கினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணை முதல்வர். முனைவர்.S. மகேஷ் குமார் மற்றும் கணினி அறிவியல் துறைத்தலைவர் S. ஜாஸ்மின் பொன்மேரி கல்லூரி பேராசிரியர்களும் இணைந்து செய்திருந்தனர்.
No comments:
Post a Comment