தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்து நிலையத்தை நாளை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 7 October 2023

தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்து நிலையத்தை நாளை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார்.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ரூ.57 கோடி மதிப்பில் புதுப்பித்து கட்டப்பட்டு உள்ளது. இப்பேருந்து நிலையத்தை நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார். 


முன்னதாக, காலை 9 மணிக்கு திருச்செந்தூர் நகராட்சியில் முடிவுற்ற பணிகள் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளையும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், ஆர்.அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad