கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி புதுப்பிக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 25 October 2023

கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி புதுப்பிக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆய்வு மேற்கொண்டார்.


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தேனியிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் வழியில் பெரியகுளம், சாத்துார், கோவில்பட்டி ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகங்களை பார்வையிட்டேன். 


105 ஆண்டுகள் பழமை வாய்ந்த வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்குள் உள்ளே நுழைந்தபோது, மகிழ்ச்சியாக இருந்தது. 


100 ஆண்டுகள் தாண்டிய பள்ளிகளை அதன் பழமை மாறாமல் புதுப்பிப்பதற்கு தமிழக முதல்வர் ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த பள்ளியும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad