ஆறுமுகநேரி - நாசரேத் அரசு பஸ் மோதி பெண் உயிரிழப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 25 October 2023

ஆறுமுகநேரி - நாசரேத் அரசு பஸ் மோதி பெண் உயிரிழப்பு.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே உள்ள அங்கமங்கலம் கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி ராமலட்சுமி (60). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் தூத்துக்குடியில் கூட்டுறவுத் துறையில் தணிக்கையாளராக உள்ளார். கணவர் இறந்து விட்ட நிலையில் ராமலட்சுமி தனியாக வசித்து வந்தார். 


சம்பவத்தன்று தூத்துக்குடியிலுள்ள மகளை பார்ப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு குரும்பூரிலிருந்து பஸ்சில் ஏறி ஆறுமுகநேரி சென்றுள்ளார். அங்குள்ள கடைக்கு சென்று மகளுக்கு சில பொருட்களை வாங்கி கொண்டு, தூத்துக்குடிக்கு பஸ் ஏறுவதற்காக ஆறுமுகநேரி பஸ் நிறுத்தம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.


ஆறுமுகநேரி மெயின் பஜார் பஸ்நிறுத்தம் அருகே சென்ற அவர் மீது, திருச்செந்தூரில் இருந்து மூலக்கரை வழியாக நாசரேத் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 


ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த ஆறுமுகநேரி போலீசார் விரைந்து சென்று ராமலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 


மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் அரசு டவுன் பஸ் ஓட்டுநர் அணையாபர நல்லூர் - பெருமாள் மகன் உடையார் (52) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad