புதுக்கோட்டை - ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் நர்மதா ராஜினாமா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 25 October 2023

புதுக்கோட்டை - ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் நர்மதா ராஜினாமா.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம், புதுக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹெலன், பொன்மணி, வசந்தா, ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் ஆஸ்கார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 

கூட்டத்தில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய 12வது வார்டு திமுக வை சேர்ந்த கவுன்சிலர் ஆர். நர்மதா தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஒன்றிய குழு தலைவர் தெரிவித்தார். 


இது குறித்து ராஜினாமா செய்த கவுன்சிலர் ஆர் நர்மதாவிடம் கேட்டபோது "எனக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருப்பதால் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad