குதிரைமொழி செம்மண் தேரிக் காட்டு பகுதியில் கருகி அழிந்து வரும் பனை மரங்கள். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 25 October 2023

குதிரைமொழி செம்மண் தேரிக் காட்டு பகுதியில் கருகி அழிந்து வரும் பனை மரங்கள்.

தமிழ் நாட்டின் கிராம புறங்களில் அதிகளவில் இருக்கும் பனைமரத்தை நம்பி நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் தொழில் செய்து வருகின்றனர். இவ்வாறு ஏழைகளின் வாழ்வாதாரத்தில் முதன்மை பெற்றுவரும், இந்த பனை மரங்கள் தற்போது கருகி காய்ந்து, முற்றிலும் முறிந்து பட்டு போகும் அளவிற்குச் சூழல் நிலவியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில், 2021-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவ மழை அதிகளவு பெய்தது. கடந்த ஆண்டு பருவ மழை சரிவரப் பெய்யவில்லை. ஆனால், கடும் வறட்சியையும் தாண்டி வளரக் கூடிய தன்மைகொண்ட பனை மரங்கள், அதன் தன்மையைக் கடந்து தற்போது கருகிக்கொண்டு வருகின்றது. கடந்த சில மாதங்களாக திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி, குதிரைமொழி தேரிக்காடு சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை மரங்கள் கருகி கொண்டிருக்கிறது. 


காரணம், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. நீர் ஆதாரம் போதுமான அளவிற்கு கிடைக்கவில்லை. பனைமரம் உருவாகி 25 ஆண்டுகள் பலம் தரும். இந்த மரம் கருகுவதால் இதனையே நம்பி இருக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை பெருத்த அளவிற்கு மக்கள் பனை மரத்தொழில் செய்து வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், இப்பகுதி பொதுமக்கள் நகரங்களை நோக்கிப் போகக்கூடிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.


கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பரமன்குறிச்சி பஞ்சாயத்தில் சீருடையார்புரத்தில் குடியிருப்பு பகுதிக்கு நடுவிலிருந்து அருகிலுள்ள வட்டன்விளை பகுதிக்கு ஆழ்துளை கிணறு மூலமாக குடிதண்ணீர் கொண்டு செல்ல பஞ்சாயத்து நிர்வாகம் முயன்ற போது தங்கள் பகுதி ஏற்கனவே குடிநீர் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தங்கள் பகுதி வறட்சியின் பிடியில் இருப்பதால் செழிப்பாக பகுதியில் இருந்து குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் என பஞ்சாயத்து அலுவலகத்தை சீருடையார்புரம் ஊர் பொதுமக்கள் சார்பாக 30க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினர் என்பது குறிப்பிடதக்கது.


தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் ஆண்டுதோறும் பல TMC கடலில் கலந்து வீணாகிக் கொண்டிருக்கின்றது. அந்த தண்ணீரை வறட்சி பிடியில் சிக்கித் தவிக்கும் தென் மாவட்டம் சுற்றியுள்ள வறண்டு கிடக்கும் குளங்களை நிரப்பி சேமித்தால் பனை மரங்களைக் காப்பாற்ற முடியும். நடவடிக்கை எடுக்குமா? தமிழக அரசு என மக்கள் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment

Post Top Ad