சாத்தான்குளம் - காவல்துறையில் ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளருக்கு இறுதி அஞ்சலி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 12 October 2023

சாத்தான்குளம் - காவல்துறையில் ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளருக்கு இறுதி அஞ்சலி.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வுப் பெற்ற சாத்தான்குளம் ஓடைக்கார தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் வேல்முருகன் (64) (11.10.2023) அன்று உடல் நலக்குறைவால் காலமானார்.


காவல்துறை தலைமை இயக்குநரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை குறிப்பாணையின்படி, காவல்துறைக்கு அவர் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அறிவுறுத்தலின் படி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் போலீசார் (12.10.2023) அன்று அன்னாரது இறுதி சடங்கில் கலந்து கொண்டு, 


தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் அவர்கள் சார்பாக மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad