தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு காவல்படையினர் சார்பாக நடைபெற்ற ‘சாகர் கவாச்” பாதுகாப்பு ஒத்திகை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 12 October 2023

தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு காவல்படையினர் சார்பாக நடைபெற்ற ‘சாகர் கவாச்” பாதுகாப்பு ஒத்திகை.

தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு காவல்படையினர் சார்பாக நடைபெற்ற 'சாகர் கவாச்" பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் தீவிரவாதிகளால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை மீட்பது போன்று ஒத்திகை.


கடந்த 10.10.2023 மற்றும் 11.10.2023 ஆகிய 2 நாட்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் ஒத்திகை நிகழ்ச்சியான 'சாகர் கவாச்" இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்டது. இதில் நேற்று (11.10.2023) தமிழ்நாடு காவல்துறை கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பாக காவல்துறை கூடுதல் இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய துறைமுகத்தில் கடல் வழியாக 6 தீவிரவாதிகள் ஊடுருவி புதிய துறைமுகம் முகத்துவாரத்தில் உள்ள அலுவலகத்தை கைப்பற்றி அங்கு பணியில் இருந்த 4 ஊழியர்களை பணய கைதிகளாக பிடித்து இருப்பதை பாதுகாப்பாக மீட்பது சம்மந்தமான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன், நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும காவல் கண்காணிப்பளார் அதிவீரபாண்டியன், தூத்துக்குடி மாவட்ட சார் ஆட்சியர் கௌரவ் குமார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமம் தூத்துக்குடி மண்டல காவல் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad