தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பேருந்து நிலையம் அருகில் திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் நாசரேத் டவர் லயன் சங்கம் மூலமாக இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்த கண் பரிசோதனை முகாம் நாசரேத் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இந்த முகாமில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் தங்கள் கண்களை பரிசோதனை செய்து கொண்டனர். தகுதியுடைய சுமார் 13 நபர்களுக்கு அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
முகாமில் கண்புரை நோய் உள்ளவர்கள், 40 வயதுக்கு மேற்பட்டோர், கண் புரை பிரச்சினை உள்ளவர்கள், கிட்ட பார்வை தூர பார்வை, வெள்ளெழுத்து பிரச்சினை உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்கள், ஏற்கனவே கண்ணாடி அணிந்தவர்கள் என பலருக்கு இலவசமாக பரிசோதனை செய்து சிகிச்சைக்கான இலவச ஆலோசனையும் வழங்கப்பட்டது.
மேலும் நாசரேத் பகுதிகளில் இருந்து இந்த முகாமில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டு வர முடியாதவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு இன்று முதல் 15 நாட்களுக்குள் கண் பரிசோதனை தேவைப்பட்டால் திருநெல்வேலி அகர்வால் கண் மருத்துவமனையில் இலவசமாக பரிசோதனை செய்யப் படும் என தெரிவித்து கொண்டனர்.
முகாம் ஏற்பாடுகளை திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர், பிஆர்ஓ பேச்சிமுத்து மற்றும் நாசரேத் டவர் லயன் சங்கத்தின் தலைவர் அகிலன், செயலர் சரண், பொருளர் அந்தோணி ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment