திருச்செந்தூர் முருகன் கோவிலில் மழை வேண்டி வருண ஜபம் நடைபெற்றது! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Friday, 27 October 2023

திருச்செந்தூர் முருகன் கோவிலில் மழை வேண்டி வருண ஜபம் நடைபெற்றது!

photo_2023-10-27_22-14-22

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மழை வேண்டி வருண ஜபம் மற்றும் யாகம் திருக்கோயில் சார்பில் நடைபெற்றது. திருச்செந்தூார் முருகன் கோவில் உள் பிரகாரத்தில் உள்ள ஷஷ்டி யாகசாலையில் திருக்கோயில் சார்பாக மழை வேண்டி காலை 7 மணி முதல் 9.30 மணி வரை வருண ஜபம் மற்றும் யாகம் நடைபெற்றது.

photo_2023-10-27_22-14-26

இதில் திருக்கோயில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் கலந்து கொண்டு உலக க்ஷேமத்திற்காக மழை வேண்டி சங்கல்பம் செய்தனர். சங்கல்பம் முடிந்த பிறகு 12 கும்பங்கள் வைத்து திரிஸ்வதந்திரர்கள் பூஜை செய்தனர். பின்னர் கணபதி ஹோமம், வருண ஹோமம், சுப்பிரமணிய ஹோமம் என பல்வேறு ஹோமங்கள் நடந்தது அதனை தொடர்ந்து பூர்ணாஹுதி நடைபெற்றது.


தொடர்ந்து யாகசாலையின் பின் புறத்தில் உள்ள காசி விஸ்வநாதருக்கு 12 வகையான விசேஷ அபிஷேகங்கள் மற்றும் பூஜை செய்த கும்பங்களில் உள்ள தீர்த்த அபிஷேகமும் நடைபெற்றன. காசிவிஸ்வநாதர் எதிரில் உள்ள நந்தி-க்கு கழுத்து அளவில் நீரை நிரப்பி அதிலும் கும்ப தீர்த்தத்தை கலந்தனர். பின்னர் பூஜை செய்த கும்பங்களில் உள்ள தீர்த்தத்தை திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் கடலில் கலந்தனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக- சுந்தரராமன் 

No comments:

Post a Comment

Post Top Ad