தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செவிலியரிடம் தவறாக பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது.
ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 27.10.2023 அன்று காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு மதுபோதையில் வந்த ஆறுமுகநேரி கீழ நாவலடிவிளையைச் சேர்ந்த முருகேசன் மகன் நரேஷ் (34), ஆறுமுகநேரி காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜன் மகன் பிரதாப்சிங் (27) மற்றும் ஆறுமுகநேரி பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் மகேஷ் மூர்த்தி (26) ஆகியோர் மேற்படி செவிலியரிடம் தகராறு செய்து தவறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மேற்படி பாதிக்கப்பட்ட செவிலியர் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தமிழ்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி எதிரிகளான நரேஷ், பிரதாப்சிங் மற்றும் மகேஷ் மூர்த்தி ஆகிய 3 பேரையும் கைது செய்தார். மேலும் இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment