ஆத்தூர் - சோலார் பேனலில் பொருத்தியிருந்த காப்பர் வயர்கள் திருட்டு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 29 October 2023

ஆத்தூர் - சோலார் பேனலில் பொருத்தியிருந்த காப்பர் வயர்கள் திருட்டு.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் பகுதியில் காப்பர் வயர்களை திருடியவர் கைது - ரூபாய் 10,000/- மதிப்புள்ள 15 கிலோ காப்பர் வயர்கள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல்.


கடந்த 27.10.2023 அன்று ஆறுமுகநேரி பேயன்விளைப் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் விக்னேஸ்வரன் (41) என்பவருக்கு சொந்தமான ஆத்தூர் தலைவன்வடலி பகுதியில் உள்ள உப்பளத்தில் சோலார் பேனலில் பொருத்தியிருந்த காப்பர் வயர்கள் திருடுபோய் உள்ளது.


இதுகுறித்து விக்னேஸ்வரன் நேற்று (28.10.2023) அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஆத்தூர் புதுநகரைச் சேர்ந்த கதிரவன் மகன் மசூதன் (22) மற்றும் சிலர் சேர்ந்து விக்னேஸ்வரனின் உப்பளத்தில் இருந்த காப்பர் வயர்களை திருடியது தெரியவந்தது.


இதனையடுத்து ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் போலீசார் எதிரி மசூதனை கைது செய்து அவரிடமிருந்த திருடப்பட்ட ரூபாய் 10,000/- மதிப்புள்ள 15 கிலோ காப்பர் வயர்களையும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad