மக்கள் களம் - நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட மக்களிடம் மாபெரும் வரவேற்பு - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 23 September 2023

மக்கள் களம் - நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட மக்களிடம் மாபெரும் வரவேற்பு

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி முன்னெடுத்திருக்கும் 'மக்கள் களம்' நிகழ்ச்சியில் மருத்துவச் சிகிச்சை, குடிநீர் பிரச்சனை, பேருந்து வசதி வேண்டி, மின் இணைப்பு, பட்டா பிரச்சனை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்ட மக்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது.


தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் '59 மக்கள் களம்' மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் நடைபெற்றுள்ளது. பொதுமக்கள் ஆரவாரத்துடன் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கை மனுக்களைக் கனிமொழி எம்.பி யிடம் வழங்கினார்கள்.


மக்கள் களம் நிகழ்ச்சிக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி, பெண்களுக்குத் தையல் இயந்திரம், சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் உதவிகள், மருத்துவ பெட்டகங்கள், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுவார். தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, நடவடிக்கை எடுக்கச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிடுவார். 

நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், செவிலியர், மின் வரியா அதிகாரி உள்ளிட்ட பலர் உடன் இருப்பார். மனுக்களைப் பெற்று சிறிது நேரம் மக்களுடன் கனிமொழி எம்.பி உரையாற்றுவார். சில கோரிக்கை மனுக்களுக்கு அங்கே இருக்கும் அதிகாரிகளை அழைத்து, இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விவாதித்து உடனடியாக தீர்வு காண உத்தரவிடுவார்.


மருத்துவச் சிகிச்சை, குடிநீர் பிரச்சனை, பேருந்து வசதி வேண்டி, மின் இணைப்பு, பட்டா பிரச்சனை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. ஆகையால், மக்கள் களம் நிகழ்ச்சியில் கோரிக்கை மனுக்களை அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படுவதாக தூத்துக்குடி மாவட்ட மக்கள் நம்புகின்றனர். மக்கள் களம் நிகழ்ச்சியின் நோக்கமே, கிராமம்களில் வசிக்கும் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனுக்கள் அளிப்பது சிரமம். அதனால், நாங்கள் உங்களைத் தேடி, உங்களின் ஊராட்சியில், கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கனிமொழி கருணாநிதி எம்.பி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad