பெண்ணிடம் தங்கநகையை பாலிஷ் செய்வதாக கூறி ஏமாற்றி திருட்டு - ரூபாய் 70,000/- மதிப்புள்ள 2 சவரன் தங்க நகை மீட்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 23 September 2023

பெண்ணிடம் தங்கநகையை பாலிஷ் செய்வதாக கூறி ஏமாற்றி திருட்டு - ரூபாய் 70,000/- மதிப்புள்ள 2 சவரன் தங்க நகை மீட்பு.

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணிடம் தங்கநகையை பாலிஷ் செய்து தருவதாக கூறி ஏமாற்றி திருடியவர் கைது - திருடப்பட்ட ரூபாய் 70,000/- மதிப்புள்ள 2 சவரன் தங்க நகை மீட்பு.



எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சேகர் (66) என்பவரது மகள் நேற்று (22.09.2023) வீட்டில் இருந்தபோது அவரது வீட்டிற்கு வந்த பீகார் மாநிலம் ரகுநாத்பூர் பகுதியைச் சேர்ந்த சிவநந்தன் மகன் சோனுகுமார் (22) என்பவர் தங்கநகையை பாலிஷ் செய்து தருவதாக கூறி ஏமாற்றி திருடி சென்று கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.


இதுகுறித்து சேகர் அளித்த புகாரின் பேரில் எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர பாண்டியன் வழக்குபதிவு செய்து எதிரி சோனுகுமாரை கைது செய்து, அவரிடமிருந்து ரூபாய் 70,000/- மதிப்புள்ள 2 சவரன் தங்க நகையையும் பறிமுதல் செய்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad