விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலத்தில் விதிமுறைகளை மீறிய 11 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு 2,55,000/-அபராதம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 21 September 2023

விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலத்தில் விதிமுறைகளை மீறிய 11 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு 2,55,000/-அபராதம்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலத்தில் விதிமுறைகளை மீறிய 11 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு - ரூபாய் 2,55,000/- வரை அபராதம் விதிப்பு - காவல்துறை நடவடிக்கை.


தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது தொடர்பாகவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று விஜர்சனம் செய்வது தொடர்பாகவும் இந்து அமைப்புகளின் தலைவர்களையும், பிரதிநிதிகளையும் கொண்டு காவல் நிலைய அளவிலும், உட்கோட்ட அளவிலும் 12.09.2023ம் தேதியும், காவல் கண்காணிப்பாளர் அவர்களால் 13.09.2023ம் தேதியும் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு மேற்படி கூட்டங்களில் பிரதிஷ்டை செய்வது தொடர்பாகவும், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாகவும், ஒவ்வொரு இனம் குறித்தும் தனித்தனியாக அறிவுரைகள் வழங்கி ஆணை பிறப்பித்து அனைவராலும் ஏற்றுக்கொள்வதாக எழுத்து மூலமான உத்தரவாதம் பெறப்பட்டிருந்தது.


இதன் அடிப்படையில் 18.09.2023ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று (20.09.2023) நடந்த விஜர்சன ஊர்வலத்தில் வந்த வாகனங்களில் 11 வாகனங்கள் விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பக்கூடிய ஸ்பீக்கர்களை வாகனங்களில் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூராக ஒலி எழுப்பிக் கொண்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டு விதிமுறைகளை மீறியதால் மேற்படி வாகனங்கள் மீது காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த வாகனங்களுக்கு ரூபாய் 2,55,000/- வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad