குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - இந்த ஆண்டு இதுவரை 124 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 21 September 2023

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - இந்த ஆண்டு இதுவரை 124 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைப்பு.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த வழிப்பறி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - இந்த ஆண்டு இதுவரை 124 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைப்பு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில்ராஜ் நடவடிக்கை.


கடந்த 30.08.2023 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள ஒரு திருமண மண்டபம் முன்பு வந்துகொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துவிட்டு அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் விளாத்திகுளம், சங்கரலிங்கபுரம், கவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் பொன்முத்துபாண்டியன் (30) என்பவரை கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரி பொன்முத்துபாண்டியன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.


மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில்ராஜ் விளாத்திகுளம், சங்கரலிங்கபுரம், கவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் பொன்முத்துபாண்டியன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மேற்படி எதிரி பொன்முத்துபாண்டியனை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.


இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 எதிரிகள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 12 எதிரிகள் உட்பட 124 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad