தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை வடக்கு தெருவை சேர்ந்த ரொபிஸ்டன் (55). இவர் துபாய் கப்பலில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி, மகன் சென்னையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆலந்தலையில் உள்ள ரொபிஸ்டன் அக்கா ஜோஸ்லின் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதனால் ஜோஸ்லின் கடந்த சில நாட்களாக இரவு மட்டும் ரொபிஸ்டன் வீட்டில் இரவு தங்குவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஜோஸ்லின், அவரது தம்பி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதில் அதிர்ச்சியடைந்த ஜோஸ்லின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ, பெட்ரூமில் உள்ள கபோர்டு போன்றவை உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. அதில் இருந்த 27½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் சம்பவ வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும் போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
No comments:
Post a Comment