324A மாவட்டம், ரவிவர்மன் மண்டலம் பேரிச்சை மரம் வட்டாரத்தைச் சேர்ந்த ஏரல் டவுன் லயன் சங்கத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான 14 ஆம் ஆண்டு பதவி ஏற்பு நிகழ்வு ஏரல் ராசி திருமண மண்டபத்தில் 13 7 2023 வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெற்றது.
இன்ஜினியர் எஸ் பாலன் கொடி வணக்கத்துடன், லயன் சுப்ரமணியன் லயன்ஸ் வணக்கம் வாசிக்க, லயன் சண்முகமுருகன் வரவேற்று பேசினார், 2019-2020 ஆம் ஆண்டுக்கான World No 1 கவர்னர் லயன் JKR முருகன் MJF புதிய நிர்வாகிகளான தலைவர் லயன் புஷ்பம் எஸ் ரமேஷ், செயலாளர் லயன் எஸ் சீனிவாசன், செயலாக்க செயலாளர் லயன் முருகராஜா MJF, பொருளாளராக லயன் வேங்கையன், இயக்குனர்களாக லயன் ஹென்றி ஜோசப், லயன் முருகன் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மாவட்ட முதலாம் துணை ஆளுநர் லயன் பி அய்யாதுரை PMJF புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தார்.
ஏரல் டவுன் லயன்ஸ் சங்கத்தின் பட்டய தலைவர் லயன் அ.ரா.க.அ.கருத்தபாண்டியன், மாவட்ட அமைச்சரவை செயலாளர் லயன் சுப்பையா, GMA ஒருங்கிணைப்பாளர் லயன் வனமூர்த்தி, LCIF ஒருங்கிணைப்பாளர் லயன் ராஜேஷ், வட்டார தலைவர் லயன் பி.வி தர்மராஜ், மாவட்ட தலைவர் பதவியேற்பு விழா லயன் மார்ட்டின், உடனடி லயன் சங்க தலைவர் லயன் பி சுந்தர், மாவட்டத்தின் இரண்டாம் துணை ஆளுநர் Dr H ஷாஜகான் PMJF ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர், மாநில அளவில் பிளஸ் டூ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற லயன் ஆர் பாலன் அவர்களின் புதல்விக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சாயர்புரம் மனவளர்ச்சி குன்றிய பள்ளிக்கு அரிசி மற்றும் 30 மாணவர்களுக்கு புதிய ஆடைகள் வழங்கப்பட்டன, கல்வி உதவித் தொகை மூன்று நபர்களுக்கு லயன் சண்முகமுருகன் வழங்கினார், நலிந்தோருக்கு அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகளை லயன் துரைராஜ், லயன் சுந்தர், லயன் கெங்கை முத்து மற்றும் லயன் சங்க உறுப்பினர்கள் வழங்கினர், கூட்டத்தின் முடிவில் லயன் சண்முகமுருகன் நன்றி கூறினார், லயன் ராஜன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.


No comments:
Post a Comment