

24 மணி நேரமும் தண்ணீர் வழங்குவதற்காக தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டது தென்திருப்பேரை பேரூராட்சி தான். இத் திட்டத்தினை செயல்படுத்த 8 கோடி ரூபாய் தென்திருப்பேரை பேரூராட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்கப்பட்டு தென்திருப்பேரை பேரூராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கு தேவையான உதவிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்யப்படும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித்தலைவர் அ.பிரம்மசக்தி, தென்திருப்பேரை பேரூராட்சித் தலைவர் ஆ.மணிமேகலை ஆனந்த், துணைத்தலைவர் து.அமிர்தவள்ளி, செயல் அலுவலர் த.ரமேஷ்பாபு, ஏரல் வட்டாட்சியர் கைலாசகுமாரசாமி, ஆவின் தலைவர் சுரேஷ்குமார், ஆழ்வார்திருநகரி ஒன்றியக்குழு தலைவர் தலைவர் ஜனகர், ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வக்குமார், முக்கிய பிரமுகர்கள் உமரிசங்கர், ராமஜெயம் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


No comments:
Post a Comment