ஏரல் - ஆற்றில் மூழ்கிய சிறுவன் பலி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Wednesday, 12 July 2023

ஏரல் - ஆற்றில் மூழ்கிய சிறுவன் பலி

1894277-101-waterdeath

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம் குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் கோவில் கொடை விழா நடந்து வருகிறது, விழாவிற்கு திருநெல்வேலி மாவட்டம், உவரி தட்டார் குடியிருப்பை சேர்ந்த கணேஷ் இவரது 12 வயது மகன் ஆதிகேசவன் அங்குள்ள பள்ளியில் எட்டாவது வகுப்பு படித்து வருகிறான், இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் நேற்று குரங்கணி முத்து மாலையம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளனர்.

tamilaga%20kural

share%20it%20-%20tamilagakural

தாமிரபரணி ஆற்றில் ஆதிகேசவன் குளித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார், ஆழம் அதிகமாக இருந்ததால் அந்த நீரில் மூழ்கியுள்ளான், அதனைத் தொடர்ந்து மாணவனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். துரதிஷ்டவசமாக கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளான், இதுகுறித்து ஏரல் காவல் நிலைய துணை ஆய்வாளர் இமானுவேல் சேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

No comments:

Post a Comment

Post Top Ad