விதிமுறைகளை மீறியதாக மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் குற்றவியல் நடவடிக்கையின் படி 286 வழக்குகள் பதிவு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 14 July 2023

விதிமுறைகளை மீறியதாக மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் குற்றவியல் நடவடிக்கையின் படி 286 வழக்குகள் பதிவு.


தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டாலங்குளம் பகுதியில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணி மண்டபத்தில் அவரது 313வது ஜெயந்தி விழா கடந்த 11.07.2023 அன்று நடைபெற்றது.


இவ்விழாவில் இருசக்கர வாகன பேரணி செல்வதற்கு காவல்துறை சார்பாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் பெண்கள் மற்றும் பொதுமக்களை இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிடாமலும் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 45 இருசக்கர வாகனங்கள் மீது 110 மோட்டார் வாகனச் சட்ட வழக்குகளும், 65 நான்கு சக்கர வாகனங்கள் மீது 150 மோட்டார் வாகனச் சட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இது தவிர 22 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் மீதும் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 286 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


மேற்படி வழக்குகளில் தேவைப்படும் பட்சத்தில் உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றி தொடர்புடைய வாகனங்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad