சுற்றுச்சூழல் தினத்தில் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் ஓவியப் போட்டி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 7 June 2023

சுற்றுச்சூழல் தினத்தில் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் ஓவியப் போட்டி

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டம் வல்லநாடு கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் கூட்டமைப்பு 2023ம் வருடத்தில் அறிவித்துள்ள  ‘நெகிழி மாசுபாட்டை ஒழிப்போம்’ என்ற மையக்கருத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவியரிடையே ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.போட்டியை கல்லூரி முதல்வர் முனைவர் தேரடிமணி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
சுற்றுச்சூழல் பேராசிரியர் ரமேஷ் இந்த ஆண்டின் மையக்கருத்தான நெகிழி மாசுபாட்டை ஒழிப்பது தொடர்பாக விளக்கிக் கூறினார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் சான்றிதழும் மற்றும் பங்கேற்ற மாணாக்கர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களும்  வழங்கப்பட்டன. 
மேலும் புகையிலை பயன்பாட்டின் தீமைகளை எடுத்துரைக்கும் வகையில் புகையிலை ஒழிப்பு உறுதிமொழியும் மாணாக்கர்கள் எடுத்தனர். இந்த நிகழ்ச்சிகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியை கவிதா புஷ்பம்  ஒருங்கிணைத்தார் .

No comments:

Post a Comment

Post Top Ad