தூத்துக்குடி மாவட்டம் முத்தையா புரம் ஸ்பிக் மற்றும் கிரீன்ஸ்டார் நிறுவனத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் எஸ்.ஆர்.ராமகிருஷ்ணன் தலைமையில் ஆலை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ஹமோனெத் ஜோசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 500 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் இல்லா புதிய உலகம் படைப்போம் என்று உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்பிக் கிரீன்ஸ்டார் நிறுவனத்தின் முதுநிலை நிர்வாக மேலாளர் ஜெயபிரகாஷ், மக்கள் தொடர்பு அலுவலர் அமிர்த கௌரி, மற்றும் ஸ்பிக், கிரீன்ஸ்டார் நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment